Skip to content

நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை விழித்து எழுந்து பார்த்த பொழுது ஆசைத்தம்பி மார்பு பகுதியில் கத்தியால்

குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் அவரது உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து ஆசைத்தம்பி உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த கண்ணன் என்பவரை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு நபர்கள் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!