பொதுத்துறை நிறுவனமான அஞ்சல்துறையை மத்திய அரசும், அஞ்சல்துறை நிர்வாகமும் அஞ்சலகம் மற்றும் டெலிவரி என இருபிரிவுகளாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதனால் பல அஞ்சலகங்கள் மூடப்படுவதுடன் அஞ்சல் அலுவலகத்தை தேடி வந்து மக்கள் தபால்கள் பெற்றுச்செல்லும் நிலை ஏற்படும்.
எனவே மத்திய அரசு மற்றும் அஞ்சல்துறையின் இந்த முடிவைக்கண்டித்தும், அஞ்சல் ஊழியர்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும்வகையில் மாலை நேரத்திலும் இரண்டாவது டெலிவரி என்ற உத்தரவை திருச்சி அஞ்சல்கோட்டம் திரும்பப்பெற வேண்டும், அஞ்சல் ஊழியர்கள் தபால்களை பட்டுவாடாசெய்ய ஏதுவாக அஞ்சலகசெயலியை பயன்படுத்தும்வகையில் செல்போன் உள்ளிட்ட அனைத்துவசதிகளையும் செய்துதர வேண்டும், டெலிவரி சென்டர்களை திறப்பதை கைவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி அஞ்சல்துறை, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு கோட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.