Skip to content

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்… முதல்வர் வாழ்த்து..

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள்  என பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..! நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!