கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 22) இவர் கரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
இன்று இருசக்கர வாகனத்தை சரி பார்ப்பதற்காக பைக் ஷோரூமில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கரூர்,திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும் பொழுது சென்டர் மீடியாவில் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே வளைவில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்ற வருவதாகவும் இது குறித்து அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.