Skip to content

சிறுமி வன்கொடுமை- கைதானவர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை, வாயை பொத்தி இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர், மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து 13 நாட்களுக்கு பின் குற்றவாளியான மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் தான் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மகளிர் காவல்நிலையத்தில் ஏற்கனவே போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடந்துவரும் நிலையில் BNS 118,351,97 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!