Skip to content

கோவை மக்களே-செப்.20,21ல் வித்யாசாகர், விஜய் ஆண்டனியின் இசை விருந்து

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய இசையின் திலகங்கள், இளையராஜா, ARரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், விஜய் அந்தோணி, அரிஜித் சிங், சோனு நிகம் மற்றும் பல ஜாம்பவான்களுடன் நடத்தப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, புதுமையான பிரம்மாண்ட முயற்சி ஒன்றில் சாஸ்தா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இறங்கியுள்ளது.

Image

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன் ஏற்பாடு செய்யவுள்ளன. ‘தி நேம் இஸ் வித்யாசாகர்’ நிகழ்ச்சி செப்டம்பர் 20 அன்றும், ‘விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட்’ செப்டம்பர் 21 அன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளன. இவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும். இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கோவையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் இதயம் கவர்ந்த‌ பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி உடன் பங்கேற்று மறக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் பாடவுள்ளனர்.

error: Content is protected !!