மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 248 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில், 222 வாக்குகள் பதிவாகின. மாலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முருகவேல் தலைவராகவும் . சங்க செயலராக பாலசுப்பிரமணியன், பொருளாராக முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு சக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்….வெற்றி பெற்ற நிர்வாகிகள்
- by Authour
