Skip to content

முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்  தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.,  இந்த நிலையில் இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக , காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ப நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.  இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.  முதலமைச்சர் வீட்டை பொறுத்தவரை இது 21வது முறையாக விடுக்கப்படும் மிரட்டல் ஆகும்.

MK stalin

அதேநேரம் நடிகர் விஜய் வீட்டில் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  வெடிகுண்டு நிபுணர்கள் , சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முழுமையாக சோதனை மேற்கொண்டனர். தீவிர சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதால், இந்த வெடிகுண்டு மிரட்டல் புகார் ஒரு புரளி என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? என்பது குறித்தும் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!