Skip to content

அமைச்சர் அன்பில் மகேஸ் டில்லி பயணம்

  • by Authour

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய  கல்வி நிதி கடந்த ஆண்டும் வழங்கவில்லை. இந்த ஆண்டும் வழங்கவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு  கூறி வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்திற்கு  2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடியிடமும் இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் சார்பில்,  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.  ஆனாலும் மத்திய அரசு கல்வியை நிதியை தருவதாக இல்லை.

இந்த நிலையில் மத்திய கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து கல்வி நிதியை கேட்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஸ்  டில்லி செல்கிறார்.

error: Content is protected !!