Skip to content

சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம் நபர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக கூறி, சோனி நிறுவனம், இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இளையராஜாவின் நிறுவனம் அவ்வாறு செய்யாமல் இருக்கும் வகையில் தடை விதிக்கவும், இடைக்கால நிவாரணம் கோரியும் சோனி நிறுவனம் 2022ல் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது

இந்த நிலையில், சோனி நிறுவனத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்ற கோரி, இளையராஜா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 28) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

error: Content is protected !!