Skip to content

தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர்  நடவடிக்கை குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதனை  தொடங்கி வைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங்  பேசியதாவது:

மக்களின் மனநிலையை எதிர்க்கட்சிகள் பிரதிபலிக்கவில்லை.  நமது  எதிரி நாட்டின் விமானங்கள் எத்தனை சுட்டு  வீழ்த்தப்பட்டது என்று கேட்கவில்லை.  மாறாக நமது நாட்டு விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதைத்தான் எதிர்கட்சிகள் கேட்கிறார்கள்.  22 நிமிடங்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.  தோல்வியை ஏற்று பாகிஸ்தான் தான் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது.  பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தான் இந்தியாவை தொடர்பு கொண்டார். சிந்தூர் மூலம் நாம் பதிலடி கொடுத்தோம்.  இந்தியாவின் சுய பாதுகாப்புக்காக  நடத்தப்பட்டது தான் ஆபரேஷன் சிந்தூர். எந்த நாட்டையையும்  பிடிக்கவேண்டும் என்பது நமது நோக்கமல்ல.  இந்த  நடவடிக்கையில் நமது வீரர்கள் ஏதும் இழப்பை சந்தித்தார்களா என கேளுங்கள்.  பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கேளுங்கள்.  இலக்குகள் பெரிதாக இருக்கும்போது நமது கவனத்தை ஒப்பீட்டளவில் சிறிய பிரச்னைகளில் திருப்பக்கூடாது. ஆபரேசன் சிந்தூர் வெற்றி பெற்றதா என்று கேளுங்கள்.  நம் பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம்.

இந்தியாவின் அனைத்து அரசாங்கங்களும் இதற்காக நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.  பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் இந்தியா நட்புறவையே  விரும்புகிறது.  மன்மோகன்சிங், மோடி  என யாராக இருந்தாலும் நாட்டில் அமைதி, செழிப்பையே விரும்பினர்.  ஒரு  குழந்தை தேர்வில்  நல்ல மார்க் எடுத்தால், அந்த மார்க் நமக்கு முக்கியமானது.

தேர்வின்போது பென்சிலை உடைந்ததா , பேனா தொலைந்து விட்டதா என்பது நம்முடைய கவலையாக இருக்க கூடாது. ஆபரேசன் சிந்தூரில் நமது இலக்கு   அடையப்பட்டது.  பாகிஸ்தானின் தற்போதைய நிலை  அனைவருக்கும் தெரியும். 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.  பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் துல்லியமாக தாக்கப்பட்டன.  ஆபரேசன் சிந்தூரில் நமது பகுதிகளுக்கோ,  நமது படைகளுக்கோ சேதம் இல்லை. முப்படைகளின் வீரம், திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.  ஆபரேசன் சிந்தூரின்போது முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசிக்கொண்டிருந்த போது போரை நிறுத்தியது யார், டிரம்ப்  கூறியதற்கு எதில் என்ன என்று எதிர்கட்சிகள் கேட்டனர். ஆனால் அவற்றுக்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கவில்லை

இதனால் ராஜ்நாத் சிங் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சிகள்அவ்வப்போது முழக்கமிட்டன. ஆனாலும்  ராஜ்நாத்சிங் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  அவரது பேச்சுக்கு ஆளுங்கட்சியினர் தைதட்டி ஆரவாரம் செய்தனர்.   பெதெரியும்.

 

error: Content is protected !!