கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணை திறக்கப்பட்டுள்ளது.
சோலையார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது கேரளா வனப்பகுதியில் உள்ள பெருங்கல்குத்து
என்ற அணைக்கு செல்கிறது தற்போது அந்த அணையும் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கேரளா வனப் பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று கடலுக்கு செல்கிறது.
இந்நிலையில் காலாடிஜன்னல் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று வனப்பகுதி வெளியேறி ஆற்றை கடக்க முயன்ற பொழுது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரித்தது யானை தண்ணீரில் அடித்துச் சென்று நீண்ட நேரம் போராடி ஆற்றை கடந்து வனப்பகுதிக்கு சென்றது சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.