Skip to content

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் கூறும்போது: இது சம்பந்தமாக ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில்இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது என்றார்.

error: Content is protected !!