Skip to content

எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

  • by Authour

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி தினகரன், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் அம்பு தான். அதை எய்தவர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என அனைத்து நடவடிக்கைகள எடுத்து வருகிறார்கள்.

திமுக வினர் மக்களை ஏமாற்றியவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். மக்கள் தான் அதற்கு தக்க பதிலடி தர வேண்டும்

தமிழ்நாட்டில மூன்றாவது, நான்காவது அணியலாம் அதற்கு வாய்ப்புள்ளதாக தான் நான் கூறினேன். அமையும் என கூறவில்லை.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த முரண்பாடும் இல்லை. மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம். தற்போது அதில் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து கூட்டணி குறித்து புது அர்த்தம் தருகிறார். வார்த்தையில் ஜாலம் செய்கிறார். ஆனால் நாங்கள் எதார்த்தத்தை கூறுகிறோம்.

தமிழ்நாட்டின் மக்களுக்கு எதிரான விவகாரங்களுக்கு குரல் கொடுக்கலாம். ஏற்கனவே டங்ஸ்டன் விவகாரத்திலும் அனைவரும் குரல் கொடுத்தோம். ஓ.பன்னீர் செல்லம் அறிக்கை வெளியிட்டதை வைத்து ஊடகங்கள் எழுதும் பொழிப்புரைக்கு நான் பதில் கூற முடியாது.

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து எனக்கு தெரியாது.

மூன்றாவது மொழியை தமிழ்நாட்டில கொண்டு வருவது தான் புதிய கல்வி கொள்கை. இந்தி என எதிலும் குறிப்பிடவில்லை. மூன்றாவதாக ஒரு மொழி படிப்பதும் நல்லது தான்.

குறிப்பிட்ட மொழியை தான் படிக்க வேண்டும் என மத்திய அரசு திணித்தால் அதை நாங்கள் எதிர்ப்போஅதற்கான நி
அந்த திட்டத்தில் அதற்கான நிதி வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும்.

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பின்பு அ.ம.மு.க இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது.
தி.மு.க விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் திமுக வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.
அமித் ஷா வின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
அதிமுக தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்து விட்டு திமுக வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். எங்களால் திமுக ஆட்சிக்கு வந்தது என பல அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.

அமித் ஷா வின் முயற்சிக்கு எந்த பங்கமும் வர கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம். தமிழ்நாட்டில் ஜாதி சண்டைகளும், ஆணவ படுகொலைகளும் அதிகமாகி உள்ளது. விடுதிகளின் பெயரை மட்டும் மாற்றினால் போதாது மக்களின் உள்ளங்களில் மாற்றம் வர வேண்டும்

டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும் அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன். எங்கள் கட்சியின் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் நிச்சயம் போட்டியிடுவார்கள். திமுக ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார். தற்போது யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்களோ விடுப்பட்ட மாதங்களுக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நியாயமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை என இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!