கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது…
எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு தொடர்ந்து 10 தேர்தலில் தோல்வி அடைந்தவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் வந்து ஒரு கருத்து சொல்கிறார். தேர்தல் நெருங்கி வருகிறது, வீட்டிற்குள் முடங்கி கிடந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ஏதோ பேசணும் என்பதற்காக
பேசுகிறார் நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் தளபதி அவர்கள் தான் மீண்டும் முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார். முதல்வர் எங்களுக்கு நிர்ணயித்த 200 இலக்குகளை தாண்டி ஒரு இமாலய வெற்றியை திமுக கூட்டணி பெரும். திமுக சார்பில் வீடு வாரியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறோம் , எந்த இடத்திலும் மக்கள் அரசை பற்றி குறை சொல்லவில்லை அந்த அளவிற்கு முதல்வர் மீதும் அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிம் சேர்த்து 57 விழுக்காடு உறுப்பினர் சேர்க்கை நடத்தி இருக்கிறோம். கரூர் தொகுதியில் 69 விழுக்காடு உறுப்பினர் சேர்த்துள்ளோம். யாரையும் கட்டாயப்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடத்தவில்லை பொதுமக்களே ஆர்வமாக திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.