அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று சாலையை கடக்க முயன்றார்.அப்பொழுது அந்த நேரத்தில் திருவரங்கத்தில் இருந்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.திடீரென்று இந்த பஸ் சாலை கடக்க முயன்ற பழனியம்மாள் மீதுஎதிர்பாரா விதமாக மோதியது. இந்த விபத்தில் பழனியம்மாள் படுகாயம் அடைந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலரில் புகையிலை பொருட்கள் கடத்தல்
திருச்சி தில்லைநகர் 11வது கிராஸ் ஜங்ஷன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது அந்த மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் இருந்து 1, 6,30 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் கைது
திருச்சி பொன்மலை பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.இதை அடுத்து நேற்று பொன்மலை இன்ஸ்பெக்டர் பெரியசாமி அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது பொன்மலை கிறிஸ்தவ ஆலயம் அருகில் ஆறு பேர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது ஜிப்பில் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு அங்கிருந்த மர்ம கும்பல் வேகமாக கலைந்துஅங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர். அப்பொழுது அதில் மூன்று பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். மேலும் மூன்று பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட மூன்று பேரை பொன்மலை போலீசார் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகர சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்பதும்,பொன்மலை மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜாபர் (வயது 19) அதே பகுதியை சேர்ந்த ரோகித் ஜான் (வயது 21) என்பது தெரியவந்தது.
மேற்கண்ட மூன்று பேரையும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அந்த பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட ஆறு பேரும் திட்டமிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், ஜாப்ரன் ரோகித் ஜான் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர மேலும் இந்த கும்பலில் இருந்து தப்பி ஓடிய சிவராமன், ஜான் போஸ்கோ , நாதன் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து கத்தி, கயிறு, மிளகாய்ப்பொடி பாக்கெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.