Skip to content

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், கும்பகோணம், இதன் சுற்று வட்டாரத்தை சார்ந்த 683 விவசாயிகள் 150 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வணிகர்கள், கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்று அதிகப் பட்சம் ரூ 7669, குறைந்தப் பட்சம் ரூ 7269, சராசரி ரூ 7475 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூபாய் 1.05 கோடி.

error: Content is protected !!