கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா ,
துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா , அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் எனபலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறையை சார்ந்தவர்கள் தனித்தனியாக முகாம் அமைத்திருந்தனர். அதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது ஒரு சில மனுக்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களில் தீர்வு காணப்பட உள்ளது. ஏளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.