திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணியில் திருச்சி மாநகர் பகுதியில் வீட்டு வசதியின்றி இருக்கும் மக்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பட்டா இல்லாதவருக்கு பட்டா வழங்க வேண்டும், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் நிலவிவரும் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் அடித்தட்டு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அரசே ஊதியம் வழங்கி ஏற்க வேண்டும், திருச்சி மாநகரில் தற்போது நடந்து வரும் மாரிஸ் பாலம் கட்டுமான பணி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால கட்டுமான பணி ஆகியவையை உடனடியாக விரைவாக முடிக்க வேண்டும், வெகு ஆண்டுகளாக நிலவி வரும் திருச்சி தஞ்சாவூர் சேவை சாலை பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனிடம்அளித்தனர். இந்த பேரணியில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி உள்ளிட்ட பல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.