Skip to content

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

அத்துடன், டிஎஸ்பி சுந்தரேசனின்  அலுவல் வாகனத்தை , எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே இறங்கிக் கொண்டு காரை அனுப்பி வையுங்கள் என  மயிலாடுதுறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்  பாலச்சந்திரன்,   டி எஸ்பியான தன்னிடம் அவமரியாதியாக பேசினார் என்றும்  டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் 200 பேருக்கு மேல் பங்கேற்ற மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது. பாலசந்திரன் மீதும் பல்வேறு  புகார்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரன் வடக்கு மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!