Skip to content

வால்பாறை அருகே 3 வயது சிறுவனை தூக்கி சென்ற புலி… தப்பிய சிறுவன்..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட மளுக்குப்பாறையில் தனியார் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளாகும் இப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகல் நேரங்களிலும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தென்படுகிறது கேரளா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த வழியானது சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியாகும், மழுக்குப்பாறை கிராமத்தில் அருகே உள்ள அடர் வனப்பகுதி வீரக்குடி ஆதிவாசி குடியிருப்பில் ஏழு குடியிருப்புகள் உள்ளது இங்குள்ள ஆதிவாசிகள் தேன், மிளகு, சாம்பிராணி மரத்தூள், பயிர் வகைகள் கிழங்குகள் உள்ளிட்ட விவசாயம் செய்யும் தொழில் செய்து வருகின்றனர் இவர்கள் வசியம் பகுதியில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பேபி சித்ரா மற்றும் அவரது மகன் ராகுல் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றைப் புலி ராகுலை தூக்கிச் சென்றது இதை கண்ட பெற்றோர்கள் கூச்சலிட்டு வனப்பகுதியில் நோக்கி ஓடினர் புலி ராகுலை விட்டு விட்டு வனப்பகுதியில் மறைந்தது இதை அடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்து ராகுலுக்கு தனியார் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு ராகுல் கொண்டு செல்லப்பட்டார் சம்பவ இடத்தில் கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிறுவனை புலி தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!