Skip to content

முதல்வர் ஸ்டாலின் வரும் 11, 12ல் திருப்பூர், கோவை சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 11, 12ம் தேதிகளில் திருப்பூர், கோவை மாட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 11ம் தேதி  சென்னையில் இருந்து கோவைக்கு  விமானத்தில் செல்கிறார்.   அங்கிருந்து  திருப்பூர் மாவட்டம் செல்கிறார்.

வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  திருப்பூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த 2 நாட்களிலும் கோவை, திருப்பூரில் சிறிய அளவில் ரோடு ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!