Skip to content

திருப்பத்தூர் அருகே வீடுபுகுந்து பட்டபகலில் கொள்ளை முயற்சி.. பெண் மீது கொடூர தாக்குதல்

  • by Authour

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்! பெண்ணை தலையில் பலமாக இரும்புராடால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு! உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆரிப் நகர் பகுதி சேர்ந்த பஷீர் இவருடைய மனைவி ரேஷ்மா (38) இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த ரேஷ்மா கத்தி கூச்சலிடேவே அருகில் இருந்த இரும்புராடால் பலமாக தலையில் மர்ம நபர் தாக்கியுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்

அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் ரேஷ்மாவின் வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார் பின்னர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த ரேஷ்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மற்றும் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த பெண்ணை தலையில் இரும்புராடால் பலமாக தாக்கி தப்பிச்சென்ற மர்ம நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது…

error: Content is protected !!