Skip to content

தரகம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் சக்கரம் ஏறி பெண் பரிதாப பலி…

தரகம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது பேருந்து சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கரூர் மாவட்டம், மஞ்சபுலிப்பட்டி கிராமம், வாலியாம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி பூங்கொடி வயது 40. இவருக்கு சொந்தமான XL இருசக்கர வாகனத்தில், அதே மஞ்சபுலிப்பட்டி கிராமம் வாளியம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி முத்துலட்சுமி வயது 55. என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு இன்று

மைலம்பட்டியில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில் தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில், முத்துலட்சுமியின் உடல் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்ற பூங்கொடி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கரூர்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காயம் பட்ட பூங்கொடியின் கணவர் குழந்தைவேல் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நாகனூர் கிராமம் ஜாமியாளம் மகன் முபாரக் அலி வயது 53.
என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெண் உடல் மீது தனியார் பேருந்து சக்கரம் ஏரியதில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!