மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா. தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சுதா டெல்லியில் உள்ளார். இன்று காலை அவர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார். சாணக்கியபுரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சுதா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். அப்போது சுதா திருடர்களுடன் போராடினார். இதில் அவரது கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டு, சுடிதாரும் கிழிந்தது. இந்த சம்பவம் குறித்து சுதா எம்.பி. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்தார். டெல்லியில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
- by Authour
