ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் சிபுசோரன் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நீண்டகாலமாக சிறுநீரக கோளாறு , பக்கவாத நோய் இருந்து வந்த நிலையில் இன்று காலை 8.56 மணிக்கு அவர் உடல் நிலை மோசமாகி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 81. சிபுசோரன் மறைவுக்கு அனைத்து கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவர் ஜார்கண்ட் முதல்வராகவும் பதவி வகித்தவர். தற்போது சிபுசோரன் மகன் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக இருக்கிறார்.