Skip to content

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் படித்து இன்று பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருப்பவர்கள், பெரிய கல்வி நிறுவனங்களில் உயர்க்கல்வி படித்துக்கொண்டிருப்பவர்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, சூர்யா- ஜோதிகா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர், இயக்குனர்கள் வெற்றிமாறன், ஞானவேல் மற்றும் நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

surya - jyothika

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரத்தின் மூலம்  கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியாக மாறி இருக்கிறார்கள் என பெருமிதமாக தெரிவித்தார். அத்துடன் அகரத்தில் படித்த மாணவர்கள் அதைவிட பல மடங்கு அதிகமாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள் என்றும்,  சொல்லப்போனால் தற்போது அகரத்தை நடத்திக்கொண்டிருப்பதே முன்னாள் மாணவர்களும், மாணவிகளும் தான் என்று கூறினார்.  நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் அகரம் பவுண்டேஷனின் ஆண்டுவிழாவை முடித்த கையோடு,  இன்று நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதி அவர்கள் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!