தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட மோதலில் காதலியின் தம்பி சுர்ஜித் கவினை வெட்டிக்கொலை செய்தார். இந்த செம்பவம் நெல்லை, தூத்துக்கடி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அரசு நிகழ்ச்சிகளுக்காக தூத்துக்குடி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், கவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
- by Authour
