தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில் பந்தல் கால் நடப்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதால் பாதுகாப்பு கருதி தேதியை மாற்றும்படி போலீசார் தெரிவித்தனர். வரும் 18 ம் தேதியில் இருந்து 22ம் தேதிக்குள் மாநாடு நடத்திக்கொள்ளும்படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே புதிய தேதியை முடிவு செய்து அறிவிப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
