லண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த இந்தியா குறுகிய நேரத்தில் 4 விக்கெட் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. 4வது போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றது. இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா ,ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பரபரப்பான 5வது போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து எதிரான தொடரை சமன் செய்தது இந்தியா. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, 2ஆவதில் இந்தியா, 3வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி. இந்நிலையில் இன்று5வது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.