நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்பிரகாஷ்தயாரிப்பில் வெளியாகியுள்ள காமடி கலந்து வந்துள்ள குடும்ப படம்தான் ஹௌஸ் மேட்ஸ் . ஹவுஸ் மேட்ஸ் படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு M.S. சதீஷ், இசை ராஜேஷ் முருகேசன், எடிட்டர் A.நிஷார் ஷரேஃப். தர்ஷன் மற்றும் அர்ஷா சாந்தினி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சொந்த வீடு இருந்தால் தான் தன் பெண்ணை கட்டிக் கொடுப்பேன் என்று அர்ஷாவின் தந்தை சொல்ல கடன் வாங்கி வேளச்சேரியில் புதிதாக வீடு வாங்குகிறார் தர்ஷன். திருமணம் ஆகி இருவரும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சிறிது நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கிறது. பிறகு அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று பயந்து வீட்டை விட்டு வெளியேற முயற்சிகின்றனர். இறுதியில் அவர்களுக்கு என்ன ஆனது? வீட்டில் இருந்தது பேய் தானா அல்லது வேறு எதுவுமா என்பதை பற்றி காமெடி கலந்த ஹாரர் வடிவில் சொல்லி இருக்கும் படம் தான் ஹவுஸ் மேட்ஸ். தர்ஷனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படமாக ஹவுஸ் மேட்ஸ் படம் அமைந்துள்ளது.ஹீரோவிற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் காளி வெங்கட் மீண்டும் ஒருமுறை அசத்தியுள்ளார். இந்த படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
காமெடி கலந்த ஹாரர் படம் ….ஹவுஸ் மேட்ஸ் பட விமர்சனம்
- by Authour
