Skip to content

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணி செயலாளர் பரணி, மணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் முரளி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் முனைவர் ஜான், வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நெசவாளர் அணி துணைச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையிலும்

நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட அவை துணை அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள் மற்றும் திமுக வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

error: Content is protected !!