தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில்
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து அசைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்போதைய முடநீக்கியல் துறை மற்றும் மருத்துவ குழுவினர் அந்த நபரை பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் . முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த நோயாளிக்கு உரிய முறையில் முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டன . தற்போது பிசியோதெரபி செய்யப்படவுள்ளது. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்ததால் அந்த நபரால் தற்போது கைகளை எளிதாக நீட்டவும், மடக்கவும் முடிகிறது . பிசியோதெரபி முடிந்த பின்னர் முழுமையாக அவரால் கைகளால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். தற்போது அந்த நபர் நலமுடன் உள்ளார். இந்த முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தென் தமிழகத்திலேயே முதன் முறையாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது . தனியார் மருத்துவமனையில் இந்த மாதிரியான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் இதற்கு 3 முதல் 4 லட்சம் வரை செலவு ஆகியிருக்கும் . அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினர்கள் மற்றும் முடநீக்கியல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
