முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கரூர் மாவட்ட திமுக அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலையிலேயே கலைஞரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சிறிது நேரத்தில் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் திரண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டனர். இதில் பலர் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். செந்தில் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஊர்வலம் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிக்கு வந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவ படத்திற்கு செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன்இ எம்.எல்.ஏக்கள் இளங்கோவன், மாணிக்கம், சிவகாமசந்தரி மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பல இடங்களில் திமுகவினர்அன்னதானம் வழங்கினர்.
அ