ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது இதனை ஒட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சரும்
திமுக தலைவர் கருணாநிதியின் திரு உருவப் சிலைக்கு ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் கருணாநிதி, திமுக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து மெளன ஊர்வலமாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.