Skip to content

அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: ….வழக்கு போட்ட பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

  • by Authour

 

தமிழ்நாடு அரசுத் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை சொல்ல, பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக  தமிழக அரசு நியமித்தது.  அதன்படி, மின்வாரிய தலைவர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்,,   அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ,   அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர்  தீரஜ் குமார்,    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  முதன்மை செயலாளர் பெ. அமுதா, ஆகியோர் அரசு செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமன வழக்கு - அபராதத்துடன் தள்ளுபடி செய்த ஐகோர்ட்.. 

அரசு அதிகாரிகள்  அரசின் செய்திதொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரரான வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அரசு திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இருக்க கூடாது என வழக்குப்போட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு நேற்று உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது நினைவிருக்கலாம்.

error: Content is protected !!