கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை தனது ஒவ்வொரு படங்களிலும் பதிவு செய்வதில் ஈடுபாடுடையவர் பாலச்சந்தர், இம்முறை மயிலின் நெகிழ வைக்கும் தோகை விரிப்பு
மற்றும் நடனத்தை நெருக்கமாக படம் பிடித்து பகிர்ந்து உள்ளார். அழகிய இயற்கையின் ஒர் ஓவியம் போல் காணப்படும் இந்த வீடியோ, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று உள்ளது. மயிலின் தோகை விரிப்பு, அதன் நுட்பமான அசைவுகள், மற்றும் பின்னணி இயற்கைக் காட்சிகள் இதனை மேலும் சிறப்பாக்குகின்றன. இயற்கை மற்றும் விலங்குகளின் காட்சிகளை விரும்புபவர்களை இது அதிகமாக கவர்ந்து உள்ளது.