கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கும்பகோணம் மேல கொட்டையூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் சிறுமியிடம் விசாரித்த போது சிறுமிக்கு சிலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பாபுராஜபுரம் சுரேஷ், புளியஞ்சேரி மாதேஷ், மேலக்காவேரி நஜுமுதீன், ஆகிய மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரில் சுரேஷ் மற்றும் மாதேஷ் ஆகியோர் ஆட்டோ ஓட்டுநர்கள்.
9 வயது சிறுமியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லும்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.