ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. அதன் தொடர்ச்சியாக காமாட்சி அம்மனுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பணம்
அலங்காரம் செய்யப்பட்டு, ஆலயத்தில் பல்வேறு இடங்களில் 500,200,100,50,10 ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.தனலட்சுமி பணம் அலங்காரத்தை காண ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது .