தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகர் 2ம் தெருவை சேர்ந்த செங்கமலம் என்பவரின் மகன் வீரமணிகண்டன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் காலை எழுந்து பார்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதில் இருந்த நான்கு பவுன் நகைகளை காணவில்லை.
இதுகுறித்து வீரமணிகண்டன் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.