ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற அதை தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது . அதை தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் சுங்ககேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத நான்காம் வெள்ளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்
- by Authour
