அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும் தெரு வாரியாக மண்டகப்படி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கண பெண்கள் முளைப்பாரி வளர்த்து மண்ணப்பன் குளம் விநாயகர் ஆலயத்திலிருந்து
ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் , அலகு காவடிகள் எடுத்தனர். ஆலயத்தில் அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது ஆடித் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.