அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் (09.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்;சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம். இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு
சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 02.08.2025 அன்று காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது கேட்டறிந்தார். மேலும், இம்முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவ பெட்டகத்தையும் வழங்கினார்.
மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவர்களான எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்தும் மற்றும் சர்க்கரை நோயியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவர், தோல்நோய் மருத்துவம், இருதயவியல் மருத்துவர், கதிரியியல் மருத்துவர், ஆகியோர் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இம்முகாமில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மணிவண்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், அரியலூர் நகர்மன்றத் துணைத்தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட நிலை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.