பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள திசா பள்ளியில் ஐ.சி. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.
போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 250 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியானது பட்டர்பிளை, ஃப்ரீ ஸ்டைல், மேக்ஸ் ட்ரக், ரிலே என பல்வேறு பிரிவிகள் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் அளவிலான போட்டிகள் 14, 17, மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் நீந்தி சென்றதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இதில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டியில் பங்கு வர தகுதி உள்ளவர்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தனர்.