Skip to content

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்,  சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ, சென்னை மாநில குற்றப்பதிவு பணியகத்தின் ஐஜி-யாக  மாறப்பட்டார். உள்துறை செயலர் தீரஜ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

error: Content is protected !!