Skip to content

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

பிரதீப் குமார் தனியார் கல்லூரியில் ஆட்டோமொபைல் இறுதி ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் பிரதீப் குமாரின் நண்பர்கள் அர்ஜுன் மற்றும் கார்த்தி ஆகியோர் சமத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தங்களது சம்பளம் பணம் பெறுவதற்காக அர்ஜூன் கார்த்தி செல்லும் போது பிரதீப்குமாரையும் அழைத்து சென்றுள்ளனர். மாரிமுத்துவிடம் சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதற்கு குடிபோதையில் இருந்த மாரிமுத்து மற்றும் அவரது மகன் நடராஜ் மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பிரதீப் குமாரை கட்டையாலும், கம்பியாலும் சரமாரியாக தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார் அருகில் இருந்தவர்கள், பிரதீப் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர்.

அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமாரின் மூளை சிதைவு அடைந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி சிகிச்சை பலன் இன்றி பிரதீப் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மாற்றுத்திறனாளியான தங்களுக்கு ஆதரவாக இருந்த மகன் இறந்த செய்தி கேட்டு துடிதுடித்த பெற்றோர் குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிரதீப் குமாரின் உடலை வாங்க மாட்டேம் என கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

அவர்களிடம் பேசிய அரசு துறை அதிகாரிகள் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

error: Content is protected !!