Skip to content

ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

  • by Authour

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகஸ்டு 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் கோவிலின் சுவர்களில் மூவர்ண தேசிய கொடி ஒளிர்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற உலக புகழ் பெற்ற யுனெஸ்கோவால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் உலக வரலாற்று சின்னமான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள சுவற்றில் மூவர்ணக் கொடி பறப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஏழு நாட்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு செல்போனின் படம் பிடித்து செல்கின்றனர்.

error: Content is protected !!