சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது.
சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணம் ஆகி விட்டதாக தனது சமூக வலை தள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார். மேலும் தான் கருவுற்று இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா பதிவிட்டு இருந்தார். முதல் மனைவி உடன் விவாகரத்து செய்யாமல் 2 ஆம் திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் முதல் மனைவி ஸ்ருத்தி உடன் ரங்காஜ் கலந்து கொண்டு இருந்தார். தற்போது இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருள் ஆகி உள்ளது.