தமிழ்நாட்டில் 2026க்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களில் உள்ள நிலையில் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் நாம் தமிழர் புதிய வரவாக வந்துள்ள தமிழக வெற்றிக்காக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் ஈடுபட்டு வருகிறது. திமுக கட்சி சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட தோறும் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாகத் தமிழக அரசு அறிவித்த நலத்திட்டங்கள் குறித்தும் கட்டுமான பணிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் திமுக கட்சியின் முக்கிய நகர்வாக உடன் பிறப்பே வா என்ற பெயரில் தொகுதி வாரியாக உள்ள நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசி வருகிறார்.
அதேபோன்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் திமுக உறுப்பினர் சேர்க்கை, மாவட்டச் செயலாளர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக வாக்குச்சாவடிக்குழு கூட்டப்பணிகள் உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது திமுகவைப் பொருத்தவரை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அது மட்டுமின்றி தேர்தல் நெருங்க உள்ள சூழலில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வாக்குத்திருட்டு மற்றும் SIR குளறுபடிகளுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து- உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் தீர்மானம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இயற்றப்பட்டது.