ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதன் இடையே சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு பெட்டி ஒன்றை ரயில்வே
நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த பெட்டியில், ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கான இடம், உணவு உண்பதற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெட்டி ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்படும் நிலையில், அதில், தேசியக் கொடி, நேதாஜி மற்றும் காந்தி அடிகளின் படங்கள் வரையப்பட்டு உள்ளன. இந்த ஓவியங்களை கோவை ரயில்வே பணிமனை ஊழியர் அருண் என்பவரே வரைந்து சிறப்பு சேர்த்து உள்ளார்.